தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வழிப்பறிக்கு சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது

வழிப்பறிக்கு சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது

வழிப்பறிக்கு சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது


ADDED : செப் 05, 2024 07:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2024 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மரக்காணம்:மரக்காணத்தில் வழிப்பறியில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி 5 பேர் நின்றிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார், அவர்களை பிடிக்க முயன்ற போது 2 பேர் மட்டும் சிக்கினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் மதிவாணன் மகன் மதன்குமார், 24; வழுதாவூர் மூர்த்தி மகன் முகிலன், 25; என்பதும் இவர்களுடன் வல்லரசு, 23; கவுதமன், 24; சரவணன், 23; ஆகியோர் இருந்ததாகவும், மரக்காணம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, மதன்குமார், முகிலனை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கத்தி, இரும்பு பைப், பல்சர் பைக்கை பறிமுதல் செய்து, தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us