/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு போட பாதுகாப்பு பணியில் 2,200 போலீசார்
/
வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு போட பாதுகாப்பு பணியில் 2,200 போலீசார்
வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு போட பாதுகாப்பு பணியில் 2,200 போலீசார்
வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு போட பாதுகாப்பு பணியில் 2,200 போலீசார்
ADDED : ஏப் 18, 2024 11:29 PM
விழுப்புரம் : லோக்சபா தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., தீபக் சிவாச் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
இன்று நடைபெற உள்ள லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச் சாவடிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்து அமைதியான முறையில் மக்கள் எவ்வித அச்சம், தயக்கமுமின்றி ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 1966 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஒரு போலீஸ்காரர் அல்லது சிறப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பதற்றமான ஓட்டு சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.பி., தீபக் சிவாச் தலைமையில் 4 ஏ.டி.எஸ்.பி.,க்ள் மேற்பார்வையில் 16 டி.எஸ்.பி.,க்கள், 55 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் உட்பட 2,200 போலீசார் மற்றும் 344 மத்திய ராணுவ பாதுகாப்பு படையினர், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 300 ஊர்காவல் படையினர், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 100 போலீசார், ஓய்வு பெற்ற காவலர்கள், ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

