/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 25 பேர் இடமாற்றம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 25 பேர் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 25 பேர் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 25 பேர் இடமாற்றம்
ADDED : ஆக 18, 2024 05:02 AM
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் இ-4 பிரிவு ராதாகிருஷ்ணன், கலால் அலுவலகம் உதவி ஆணையர் பிரிவிற்கும், காணை குறுவட்டம் சாவித்திரி, விழுப்புரம் நிலம் எடுப்பு தனித்தாசில்தார் பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் தினேஷ்குமார், வானுார் தாலுகா அலுவலகத்திற்கும், இங்கிருந்த வசுமதி, திண்டிவனம் தாலுகா அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, மாவட்டத்தில் 25 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி பிறப்பித்துள்ளார்.