/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டா மாறுதலுக்கு ரூ.25,000 லஞ்ச வி.ஏ.ஓ., கைது
/
பட்டா மாறுதலுக்கு ரூ.25,000 லஞ்ச வி.ஏ.ஓ., கைது
ADDED : ஆக 18, 2024 02:19 AM

மரக்காணம்:விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த ஆலகிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 40; கட்டளை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 43, தன் தந்தை பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை தன் பெயரில் பட்டா மாறுதல் செய்ய லட்சுமணனை அணுகினார். அவர், '25,000 ரூபாய் கொடுத்தால் பட்டா மாறுதலுக்கு கையெழுத்து போடுவேன்' என, கூறியுள்ளார்.
யுவராஜ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து, நேற்று போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய, 25,000 ரூபாயை யுவராஜ் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமணனிடம் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார், லட்சுமணனை கையும், களவுமாக லஞ்சப் பணத்துடன் கைது செய்தனர்.