/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் பாய்ந்ததில் 3 வாலிபர்கள் படுகாயம்
/
மின்சாரம் பாய்ந்ததில் 3 வாலிபர்கள் படுகாயம்
ADDED : ஆக 03, 2024 08:20 PM
செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாளை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 19, கோகுல்ராஜ், 18, ஆக்கி, 18; எலக்ட்ரீஷியன்கள். இவர்கள், மூவரும் நேற்று காலை, செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக கோவில் எதிரில் உள்ள அரச மரத்தில் சீரியல் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காற்று வீசியதில், சீரியல் செட் அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் விழுந்து அனைத்து சீரியல் செட்களிலும் மின்சாரம் பாய்ந்து மூவரும் மரத்தில் இருந்து கீழே விழுந்தனர். படுகாயமடைந்த மூவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.