/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் விழுப்புரத்தில் 350 பேர் கைது
/
போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் விழுப்புரத்தில் 350 பேர் கைது
போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் விழுப்புரத்தில் 350 பேர் கைது
போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் விழுப்புரத்தில் 350 பேர் கைது
ADDED : ஆக 28, 2024 05:50 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 350 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைகளை உடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, நேற்று காலை 11:00 மணிக்கு விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் எல்லீஸ்சத்திரம் மற்றும் புதிய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மண்டல தலைவர் விழுப்புரம் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடலுார் கந்தசாமி, திருவண்ணாமலை நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர்கள் ராமமூர்த்தி, பாஸ்கரன், லட்சுமிநாராயணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தை கைவிடாததால் இரு இடங்களில் மறியலில் ஈடுபட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மறியலால் விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.