/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கஞ்சா, புகையிலை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது
/
கஞ்சா, புகையிலை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது
கஞ்சா, புகையிலை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது
கஞ்சா, புகையிலை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது
ADDED : மே 26, 2024 05:31 AM
திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர் ஏரிக்கரையோரம் நேற்று காலை ஒலக்கூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர், 25; என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சுரேந்தரை கைது செய்தனர்.
இதேபோல் திண்டிவனம் வடஆலப்பாக்கம் ரோட்டில் உள்ள பங்க் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த விட்டலாபுரத்தை சேர்ந்த பூபாலன், 30; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து பூதேரி பகுதியிலுள்ள பங்க் கடையில் விற்பனை செய்த செல்வி, 35; கீதா, 38; ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.