ADDED : ஜூன் 30, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கொங்கராயனுார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பணம் வைத்து சூதாடிய கொங்கராயனுார் கிராமத்தைச் சேர்ந்த குமார், 47; ஆறுமுகம், 47; ஐயப்பன், 33; விழுப்புரம், அரியூர் ராகுல்காந்தி, 34; திருவெண்ணெய்நல்லுார் ராமு மகன் மதியழகன், 38; ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.