/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாங்கிய மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு
/
துாங்கிய மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு
ADDED : மார் 21, 2024 11:51 AM
வானுார்: கிளியனுார் அருகே மூதாட்டியிடம் 5 சவரன் நகையை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிளியனுார் அடுத்த ஆண்டியார்பாளையம் பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன் மனைவி ராஜகுமாரி, 60; இவர், தனது மகன் பாஸ்கரன் பராமரிப்பில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராஜகுமாரி வீட்டின் ஹாலிலும், பாஸ்கரன் தனது மனைவி, மகன்களுடன் ஒரு அறையிலும் துாங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 2:00 மணியளவில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், ராஜகுமாரி அணிந்திருந்த செயினை பறித்துள்ளார். திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டதைத் தொடர்ந்து பஸ்கரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் எழுந்து வருவதற்குள், மர்ம நபர் 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

