/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காய்கறி வியாபாரி வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை
/
காய்கறி வியாபாரி வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை
காய்கறி வியாபாரி வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை
காய்கறி வியாபாரி வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை
ADDED : ஆக 03, 2024 11:58 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண் காய்கறி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி சந்திரலேகா, 45; மினி சரக்கு வேனில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர், வீட்டில் தனியாக இருக்கும் நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீட்டை பூட்டி கொண்டு, விழுப்புரம் அனிச்சம்பாளையம் சாலையில் உள்ள மீன் மார்கெட்டிற்கு மீன் வாங்கச் சென்றார்.
மீண்டும் 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 8 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், கைரேகை பிரிவினர் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.