/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்.கல்வியியல் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா
/
இ.எஸ்.கல்வியியல் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா
இ.எஸ்.கல்வியியல் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா
இ.எஸ்.கல்வியியல் கல்லூரியில் 8-வது பட்டமளிப்பு விழா
ADDED : மே 26, 2024 05:33 AM

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்.கல்வியியல் கல்லூரியில் 8 வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழுப்புரம் இ.எஸ்.கல்வியல் கல்லூரி கலையரங்கில் நடந்த விழாவுக்கு, கல்வி குழும தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செந்தில்முருகன் வரவேற்றார்.
விழுப்புரம் அண்ணா அரசு கலை கல்லூரி முதல்வர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 120 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசும் போது, 'பட்டம் பெறும் ஆசிரியர்கள், எதிர்காலத்தில் உலகளவில், சாதிக்கும் மாணவர்களை உருவாக்க வேண்டும். இன்றைய உலக சூழல், கல்வி நிலை, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பன்முக திறன்களை வளர்த்துக்கொண்டு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக திகழ வேண்டும்' என்று பேசினார்.
விழாவில் இ.எஸ்.பொறியியல் கல்லூரி முதல்வர் இந்திரா, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆமோஸ்ட் ராபர்ட் ஜெயச்சந்திரன், இ.எஸ். கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். துணை பேராசிரியர் அபிநயா நன்றி கூறினார்.