/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பினர் மோதல் 13 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பினர் மோதல் 13 பேர் மீது வழக்கு
ADDED : மே 30, 2024 11:05 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதல் தொடர்பாக, 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த ஆலத்துார் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25ம் தேதி நடந்தது. விழாவிற்கு, வந்த நன்னாடு காலனியைச் சேர்ந்த முத்தையன் மகன் வெற்றிவேல், 32; பாலாஜி, சாரதி, அபி உள்ளிட்டோர், அங்கு நின்றிருந்த அதே ஊரை சேர்ந்த மனோகர் மகன் செந்தமிழ்வாணன், 30; என்பவரிடம் தகராறு செய்துள்ளனர்.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 28ம் தேதி இரவு செந்தமிழ்வாணனை, வெற்றிவேல், பாலாஜி, சாரதி, அபி உள்ளிட்டோர் தாக்கினர்.
இதில், அவர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையறிந்த செந்தமிழ்வாணன் தரப்பினர் வெற்றிவேல் உள்ளிட்டோரை தாக்கினர். இதில், வெற்றிவேல் காயமடைந்தார்.
இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், வெற்றிவேல், பாலாஜி, சாரதி, அபி, எழில், பிரவீன் மற்றும் செந்தமிழ்வாணன், வடிவேல், தனசேகர், சேது, சுரேஷ், ராஜா, இனியன் ஆகிய 13 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.