/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் மீது வழக்கு
/
போலீஸ்காரரை தாக்கிய டிரைவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 03, 2024 06:36 AM
திண்டிவனம், : திண்டிவனத்தில் ஆயுதப்படை போலீஸ்காரரை தாக்கிய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் மணிகண்டன், 29; ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் மப்டியில், திண்டிவனம் தீர்த்தக்குளம் வழியாக அவரது நண்பருடன் பைக்கில் சென்றார். அப்போது முன்னால் சென்ற டாடா ஏஸ் வேனிலிருந்து வீசிய குப்பை மணிகண்டன் மீது விழுந்தது.
உடன் வேனை நிறுத்தி டிரைவரிடம் தட்டி கேட்டார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வேன் டிரைவர், மணிகண்டனைத் தாக்கினார்.
இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.