ADDED : மே 08, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : காரணை ஊராட்சியில் நேற்று பெய்த மழையில் மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.
கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வம், 62. இவர் நேற்று முன்தினம் மாலை தனது பசு மாடு மற்றும் கன்றுக் குட்டிகளை வயலில் கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று அதிகாலையில் இருந்து இப்பகுதியில் பெய்த மழை மற்றும் இடி மின்னல் காரணமாக செல்வத்தின் பசுமாடு மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த கால் நடை மருத்துவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.