/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சிக்கோட்டை வரலாறு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி
/
செஞ்சிக்கோட்டை வரலாறு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி
செஞ்சிக்கோட்டை வரலாறு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி
செஞ்சிக்கோட்டை வரலாறு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி
ADDED : செப் 18, 2024 04:45 AM
விழுப்புரம் : செஞ்சி கோட்டையை யுனஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஆய்வு செய்ய உள்ளதால், அதன் வரலாற்று தகவல்களை தெரிந்தவர்களுடன், செஞ்சிக் கோட்டையில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் உள்ள செஞ்சி கோட்டையை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வதற்கு, யுனெஸ்கோ குழுவினர் 27ம் தேதி செஞ்சிக்கு வருகை புரிந்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, செஞ்சி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான 3 நாட்கள், செஞ்சி கோட்டையை பார்வையிட்டு மரபு நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர்.
மேலும், 21ம் தேதி செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள், செஞ்சியை பற்றி புராதான வரலாற்று தகவல்களை தெரிந்த பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்களுடன், செஞ்சிக் கோட்டையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

