/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதியவரை கடித்து குதறிய நாய் திண்டிவனத்தில் பரபரப்பு
/
முதியவரை கடித்து குதறிய நாய் திண்டிவனத்தில் பரபரப்பு
முதியவரை கடித்து குதறிய நாய் திண்டிவனத்தில் பரபரப்பு
முதியவரை கடித்து குதறிய நாய் திண்டிவனத்தில் பரபரப்பு
ADDED : மே 15, 2024 01:27 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில், வெறி நாய் கடித்துக் குதறியதில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டிவனம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி, 87; இவர், நேற்று காலை 7:15 மணியளில் அங்குள்ள டீக்கடைக்கு சென்று வீட்டிற்கு வந்தார்.
அங்கு அவரது கூரை வீட்டின் வாசல்படியில் படுத்திருந்த நாயை துரத்த முயன்றார்.
அப்போது அந்த வெறி நாய் முதியவரை கை, கால் என அனைத்து இடங்களில் கடித்து குதறியது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் நாயை அடித்து விரட்டி, முதியவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டிவனம் நகராட்சியில் சுற்றித்திரியும் வெறி நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து எனவும், நாய்களை பிடிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் பல முறை கோரிக்கை வைத்தும், நாய்களை பிடிப்பதில் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.