/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.ஐ.,யை வெட்ட முயன்ற பிரபல ரவுடி கைது
/
எஸ்.ஐ.,யை வெட்ட முயன்ற பிரபல ரவுடி கைது
ADDED : ஆக 08, 2024 12:17 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீஸ்காரர் சந்திரமோகன் ஆகியோர் நேற்று மதியம் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த சித்தேரிக்கரையை சேர்ந்த குமார் மகன் பாலாஜி,28; என்பவரை விசாரிக்க சென்றனர்.
உடன் அவர், ' நான் யார் தெரியுமா, என்னை விசாரிக்கறீங்களா' எனக்கூறி திட்டியதோடு, போலீஸ்காரர் சந்திரமோகனை தாக்கினார். பின், சப்--இன்ஸ்பெக்டரை, கத்தியால் வெட்ட முயன்றார்.
அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவர் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இவர் மீது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.