/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழைய வாகனங்களை உடைக்கும் கடையில் திடீர் தீ விபத்து பல லட்சம் பொருட்கள் சேதம்

ADDED : ஆக 24, 2024 05:53 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பழைய வாகனங்களை உடைத்து எடுக்கும் கடையில் இரவில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தது.
விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் பழைய கார், வேன் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து உடைத்து அதன் பாகங்களை பிரித்து எடுக்கும் பழைய ஸ்கிராப் கடை இயங்கி வருகிறது.
இந்தக் கடையில் நேற்று இரவு 9:00 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஷாஜகான் பிரபு உள்ளிட்ட குழுவினர் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பழைய கார், அதன் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.