/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொடர் விடுமுறை எதிரொலி வாகனங்கள் அணிவகுப்பு
/
தொடர் விடுமுறை எதிரொலி வாகனங்கள் அணிவகுப்பு
ADDED : ஆக 16, 2024 02:18 AM

விக்கிரவாண்டி:சுதந்திர தினம், வார விடுமுறை என, தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களை நோக்கி 70 ஆயிரம் வாகனங்கள் சென்றன.
தமிழகத்தில் நேற்று சுதந்திர தினம், இன்று ஒரு நாள் விடுமுறை எடுத்தால் நாளை சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
அதையொட்டி பெரும்பாலானோர் வெள்ளிக் கிழமை விடுப்பு எடுத்துக் கொண்டவர்கள் நேற்று முன்தினம் புதன் கிழமை மாலை முதல் விடுமுறையை கொண்டாட தங்களது சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லத் துவங்கினர்.
விக்கிரவாண்டி டோல்கேட்டில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் எளிதாக கடக்க 8 லேன்கள் திறந்து விடப்பட்டதால், டோல் பிளாசாவில் அதிகபட்சமாக 5 நிமிட காத்திருப்பு இடைவெளியில் வாகனங்கள் கடந்தன.
டோல்கேட்டில் 14ம் தேதியன்று 34 ஆயிரம் வாகனங்களும், நேற்று 15ம் தேதி வாகன போக்குவரத்து அதிகரித்து மதியம் 3:00 மணி வரை 27 ஆயிரம் வாகனங்களும் கடந்து சென்றன.

