/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூதேரியில் புதிய ரேஷன் கடை திறக்க நடவடிக்கை தேவை
/
பூதேரியில் புதிய ரேஷன் கடை திறக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 11, 2024 06:46 AM

திண்டிவனம்: திண்டிவனம் பூதேரி பகுதியில் 16 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டிவனம் நகராட்சி 31வது வார்டில் உள்ள பூதேரி வடக்கு தெருவில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் பல ஆண்டுகளாக ரேஷன் கடை இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி பூதேரி மெயின் ரோட்டில் புதியதாக கட்டடம் கட்டப்பட்டு காட்சிப் பொருளாக உள்ளது. விரைவில் புதிய கட்டடத்தை திறந்து அங்கு ரேஷன் கடை செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.