/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் ஸ்டாண்டை பைபாஸ் சாலையுடன் இணைக்க நடவடிக்கை தேவை
/
பஸ் ஸ்டாண்டை பைபாஸ் சாலையுடன் இணைக்க நடவடிக்கை தேவை
பஸ் ஸ்டாண்டை பைபாஸ் சாலையுடன் இணைக்க நடவடிக்கை தேவை
பஸ் ஸ்டாண்டை பைபாஸ் சாலையுடன் இணைக்க நடவடிக்கை தேவை
ADDED : செப் 11, 2024 11:13 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பஸ்நிலையத்தை பைபாஸ் சாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விக்கிரவாண்டியில் கடந்த 2010 ம் ஆண்டு முதல் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அதற்கு முன்னர் மாநகர பஸ்கள் அனைத்தும் விக்கிரவாண்டி நகருக்குள் வந்து சென்றன. பைபாஸ் சாலை அமைத்து டோல்பிளாசா திறந்ததிலிருந்து மாநகர பஸ்கள் எதுவும் நகருக்குள் வருவதில்லை.
பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல கடந்த 2011ம் ஆண்டு தொகுதியின் அப்போதைய எம்.எல்.ஏ., வான ராமமூர்த்தி பலமுறை முயற்சி செய்தும் கோரிக்கை நிறைவேறவில்லை.
அதன் பிறகு வந்த எம்.எல்.ஏ.,க்கள் ராதாமணி, முத்தமிழ் செல்வன், புகழேந்தி ஆகியோர் தொடர்ச்சியாக பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல எடுத்த தொடர் முயற்சிகள் தொல்வியடைந்தது.
தற்பொழுது விபத்துகளை தவிர்க்க வடக்கு பைபாஸ் முனையில் நகாய் சார்பில் மேம்பால கட்டுமான பணிகள் துவங்க பைபாஸ் சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா முயற்சியால் சிறு விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான பஸ் நிலையம் பின்புறம் உழவர் சந்தை துவங்க பணிகள் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி பஸ் நிலையத்திற்கும் பைபாஸ் சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலைக்கும் சுமார் 200 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது.
பொதுமக்களின் நீண்டநாள் கோரி்ககையான பஸ் நிலையத்துடன் பைபாஸ் சாலை இணைக்க இது சரியான தருணமாக கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ,மாவட்ட அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோர் பெரு முயற்சி எடுத்து பஸ் நிலையத்துடன் பைபாஸ் சாலையை இணைத்தால் பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு வகைகளில் பயன்பெறுவார்கள்.
மாநகர பஸ்களும் நகருக்குள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும். விக்கிரவாண்டி பேரூராட்சியின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.

