/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் இடம் தேர்வு
/
நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் இடம் தேர்வு
நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் இடம் தேர்வு
நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் இடம் தேர்வு
ADDED : ஆக 15, 2024 04:36 AM
விக்கிரவாண்டி: நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விக்கிரவாண்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி, வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நடிகர் விஜய், மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தனது அரசியல் பிரவேசத்தின் முதல் மாநாட்டை, வரும் செப்டம்பர் 22ம் தேதி, வெகு விமர்சையாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அதையொட்டி, திருச்சியில் ரயில்வே துறை இடத்தில் கட்சியின் மாநாட்டை நடத்த அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.
ஆனால், ரயில்வே அதிகாரிகள் இதுவரை அனுமதி தரவில்லை. அதனால், மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பைபாசில் உள்ள தனியாருக்கு சொந்தமான 85 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு, விஜய் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.
அவரது ஒப்புதல் கிடைத்ததும், இடத்தின் உரிமையாளரிடம் மாநாடு நடத்த ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.
மாநாட்டிற்கு தேர்வு செய்துள்ள இந்த இடத்தில் கடந்த 2021ல் அ.தி.மு.க., சார்பில் மாநாடு நடத்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பூஜை போட்டு பணியை துவங்கிய நிலையில் தேர்தல் தேதி அறிவித்ததால் மாநாடு நடைபெறவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில் கடலுார், விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இங்கு பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.