/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் 42 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சம் கடன் உதவி
/
கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் 42 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சம் கடன் உதவி
கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் 42 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சம் கடன் உதவி
கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் 42 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சம் கடன் உதவி
ADDED : ஆக 17, 2024 03:12 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர், 42 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார்.
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் கிடங்கில் உள்ள அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு லாரிகள் மூலம் கொண்டு செல்லும் பொருட்களின் தரம் மற்றும் எடையளவு குறித்து வாகனத்தில் ஏறி சரிபார்த்தார்.
பிறகு அருகே உள்ள கூட்டுறவு பண்டக சாலையினை பார்வையிட்டு, பொருட்களின் தரம் குறித்தும், பாக்கெட் மூலம் விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில், வளவனூரில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை துவக்கி வைத்தார்.
மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் குறிஞ்சி மகளிர் சுயஉதவிக்குழுவில் 20 பயானிகளுக்கு ரூ.15 லட்சமும், காணை கூட்டுறவு வங்கி சார்பில் கோணூர் மகளிர் சுய உதவிக்குழுவில் 15 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவியும், ரூ.50,000 மதிப்பில் ஒருவருக்கு மகளிர் தொழில் முனைவோர் கடன் உதவியும், விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி மூலம் 4 பயானிகளுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் அடமான கடன், சிறு வணிக கடன் என மொத்தம் 42 பயானிகளுக்கு ரூ.27 லட்சம் கடன் உதவிகள் வழங்கினார்.
ஆய்வின்போது கலெக்டர் பழனி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பெரியசாமி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் சுவர்ணலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், துணைப்பதிவாளர்கள் கண்ணன், பிரியதர்ஷினி, ராகினி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.