/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பார்வை
/
ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பார்வை
ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பார்வை
ஓட்டு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பார்வை
ADDED : மே 15, 2024 07:34 AM

விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தை, அ.தி.மு.க., வேட்பாளர் பார்வையிட்டார்.
விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், பலத்த பாதுகாப்புடன், விழுப்புரம் தொகுதியில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் உள்ள கண்காணிப்பு மையத்திற்கு, அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜ், தெற்கு நகர செயலாளர் பசுபதி, நேற்று முன்தினம் மாலை நேரில் பார்வையிட்டனர்.
அங்கு கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து செயல்படுவது குறித்து தங்களது கட்சி ஏஜன்ட்டுகளிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக, வேட்பாளருடன் சென்ற கட்சி நிர்வாகிகளை கல்லுாரி மெயின் கேட் எதிரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். நுழைவு பாஸ் உள்ளவர்கள் மட்டும், உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.