/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு மாஜி அமைச்சர் சண்முகம் சாட்சியம்
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு மாஜி அமைச்சர் சண்முகம் சாட்சியம்
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு மாஜி அமைச்சர் சண்முகம் சாட்சியம்
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு மாஜி அமைச்சர் சண்முகம் சாட்சியம்
ADDED : ஆக 22, 2024 03:01 AM

மயிலம்:திண்டிவனத்தில் நடந்த அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் சண்முகம் சாட்சியம் அளித்தார்.
திண்டிவனத்தை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம். இவர், கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் கருணாநிதியை தோல்வியடையச் செய்தார்.
தேர்தல் முடிவு வெளியான அன்று இரவு சண்முகம் வீட்டில் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது. அதில் சண்முகம் உயிர் தப்பினார். அவரது ஆதரவாளரான அ.தி.மு.க., பிரமுகர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திண்டிவனம் போலீசார், பா.ம.க.,வினர் 26 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு கடந்த 2012ம் ஆண்டு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த இவ்வழக்கு, திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மதியம் 2:30 மணிக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம், நீதிபதி முகமது பாரூக் முன் ஆஜராகி ஒன்றரை மணி நேரமும், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஒரு மணி நேரம் சாட்சியம் அளித்தனர்.
அப்போது சி.பி.ஐ., தரப்பில் வழக்கறிஞர் டோமினிக் விஜயன், சண்முகம் தரப்பில் கிருஷ்ணன், செல்வராஜ், பிரபாகரன் ஆஜராகினர்.