ADDED : செப் 17, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த ஈயகுணம் கிராமத்தில் அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
மேல்மலையனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி மேற்கு கோவிந்தசாமி, கிழக்கு சோழன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரித்விராஜ், மாவட்ட வக்கில் அணி பொருளாளர் அருண்தத்தன், அனந்தபுரம் பேரூராட்சி செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார்.
தலைமை நிலைய பேச்சாளர்கள் புரட்சித்துரை, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ஜாகிர்உசேன் ஆகியோர் சிறப்புரயாற்றினர்.
எம்.ஜி.ஆர்., இளைஞரணி ஒன்றிய செயலாளர் முரளி நன்றி கூறினார்.