/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'நமக்கு வாழ்வா சாவா' தேர்தல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உருக்கம்
/
'நமக்கு வாழ்வா சாவா' தேர்தல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உருக்கம்
'நமக்கு வாழ்வா சாவா' தேர்தல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உருக்கம்
'நமக்கு வாழ்வா சாவா' தேர்தல் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உருக்கம்
ADDED : ஏப் 03, 2024 10:58 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் மாவட்ட ஜெ.,பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் பேசியதாவது.
தேர்தல் பிரசாரத்தில் வி.சி.கட்சியினர் ஆதிதிராவிடர் பகுதியில் இந்த தேர்தல் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் பானை சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று கேட்கின்றனர்.
மற்றொரு கட்சியினர் கிராமப்பகுதியில் ஒரு பிரிவு மக்களிடம் சாதியை கூறி மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று கேட்கின்றனர்.
இதில் அ.தி.மு.க.,மட்டும்தான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சியாக உள்ளது. சாதி பாகுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கின்றோம் .
இந்த தேர்தல் நமக்கு வாழ்வா சாவா தேர்தலாகும். நாம் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்' என்று எம்.எல்.ஏ., பேசினார்.