நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஊருக்கு புறப்பட்ட வாலிபர் காணாமல்போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 52; இவரது மகன் பிரேம்குமார், 35; இவர், கடந்த ஆகஸ்ட் மாதம், விழுப்புரம் அடுத்துள்ள ராமையன்பாளையத்தில் உள்ள அவரது அக்கா கோகிலாதேவி வீட்டிற்கு வந்திருந்தார்.
சில நாள்கள் கழித்து, கடந்த ஆக.16ம் தேதி ஊருக்கு புறப்பட்டார். அவரை, அவரது மாமா சுந்தரவேல், பைக்கில் அழைத்துச் சென்று, விழுப்புரம் சிக்கனல் சந்திப்பில், சென்னை செல்லும் பஸ்சில் ஏற்றிவிடுவதற்காக அங்கு விட்டு வந்தார்.
ஆனால், பிரேம்குமார், சென்னைக்கும் செல்லவில்லை, வீடும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.