/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரம் சத்சங்கத்தில் அகவல் பாராயணம்
/
கண்டாச்சிபுரம் சத்சங்கத்தில் அகவல் பாராயணம்
ADDED : மே 26, 2024 05:29 AM
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சத்சங்கம் சார்பில் அகவல் பாராயணம் மற்றும் சன்மார்க்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கண்டாச்சிபுரம் சத்சங்கம் சார்பில் காலை 9 மணி அளவில் சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கம் தலைமையில் அகவல் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.பகல் 12 மணி அளவில் ஜோதிதரிசனம் நடைபெற்றது.
தொடர்ந்து சுப்ரமணிய சுவாமிகள் குடும்பத்தினரின் அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு கருணாகரன்தலைமையில் சன்மார்க்கப் பொதுக்கூட்டம் நடந்தது. சங்கநிர்வாகி கார்த்திகேயன் வரவேற்றார்.இதில் சிறப்புச்சொற்பொழிவாளர்கள் விஸ்வநாதன்,தேவிகாராணி, பச்சையம்மாள் சரவணன் ஆகியோர் பேசினர். சத்சங்க செயலாளர் நன்றி கூறினார்.