/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரும்புத்திரை போட்டு செயல்படும் வேளாண் துறை ; செஞ்சி, வல்லம் பகுதி விவசாயிகள் அதிருப்தி
/
இரும்புத்திரை போட்டு செயல்படும் வேளாண் துறை ; செஞ்சி, வல்லம் பகுதி விவசாயிகள் அதிருப்தி
இரும்புத்திரை போட்டு செயல்படும் வேளாண் துறை ; செஞ்சி, வல்லம் பகுதி விவசாயிகள் அதிருப்தி
இரும்புத்திரை போட்டு செயல்படும் வேளாண் துறை ; செஞ்சி, வல்லம் பகுதி விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஆக 06, 2024 07:00 AM
அரசின் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதில் இரும்புத்திரை போட்டு செயல்படும், செஞ்சி, வல்லம் பகுதி வேளாண் அதிகாரிகள் மீது விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தியாவின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். விவசாயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமானது. எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் வேளாண்மைத்துறை மூலம் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பருவ காலத்தில் ஏற்படும் மாற்றங்களில் இருந்து பயிர்களை பாதுகாக்கவும், சாகுபடியில் நவீன யுக்திகளை விவசாயிகளுக்கு கற்பிக்கவும், அரசின் மானிய திட்டங்கள், விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதை வேளாண்மைத்துறையினர் செய்து வருகின்றனர்.
அந்தந்த பகுதியில் இயங்கி வரும் வேளாண்மைத் துறையினர். அந்த பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள், அரசு வழங்கும் விதைகள், உரங்கள், புதிய திட்டங்கள் குறித்து அந்தந்த பகுதி நாளிதழ்களில் செய்திகளை வெளியிட்டும், அரசு தொலைக்காட்சி, வானொலியிலும் விவசாய தகவல்களை வெளியிட்டும் விவசாயிகளிடம் தகவல்களை சேர்ப்பது வழக்கம்.
மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட அலுவலர்களும், வட்டார அளவில் திட்டங்களை செயல்படுத்தும் போது வட்டார அளவிளான அதிகாரிகளும் செய்திகளை வெளியிடுவது வழக்கம்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக செஞ்சி, வல்லத்தில் இயங்கும் வேளாண்மைத் துறையினர் அரசின் எந்த திட்டங்கள் குறித்தும், விதை, உரம் வினியோகம் குறித்தும் எந்த செய்தியையும் பத்திரிகைகளில் வெளியிடுவதில்லை.
தினமும் வேளாண்மைத்துறை அலுவலகத்திற்கு வந்து செல்லும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அரசின் திட்டங்களைக் கூறி அவர்கள் மூலம் பயனாளிகளை தேர்வு செய்கின்றனர்.
அந்த நபர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் தகவல் தெரிவித்து அவர்கள் மட்டும் தொடர்ந்து அரசின் திட்டங்கள் மூலம் பயனடைகின்றனர்.
இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருகின்றன. அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி பட்டத்தில் செஞ்சி, வல்லம் பகுதி விவசாயிகள் தீவிர நெல் சாகுபடியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், என்ன ரக நெல் விதைகள் இருப்பு உள்ளது என்பதையும் வேளாண்மைத்துறை செய்தியாக வெளியிடமல் இரும்பு திரையிட்ட துறையாக மாற்றி இருப்பது செஞ்சி, வல்லம் பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்-