/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு பயிற்சி
/
வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 13, 2024 07:24 AM

செஞ்சி: வல்லம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
வல்லம் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார்.
உதவி கால்நடை மருத்துவர் மணிமாறன், தோட்டக்கலை உதவி இயக்குனர் கவுதம், வேளாண்மை அலுவலர் பரணிதரன் ஆகியோர் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். முன்னோடி விவசாயிகள் சுப்புராயலு, இளையராஜா, தனஞ்செழியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். விவசாயிகளுக்கு பழ மரக்கன்றுகள், மண்புழு உரப்படுக்கை வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திர போஸ், உதவி தொழில் நுட்ப மேலாளர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர். துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜு, உதவி அலுவலர் பிரபாகரன், ஹரிதாஸ், ஜீவா, மஞ்சு, தமிழரசி ,அபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர்.