/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மானிய உரங்களோடு இணைப்பொருட்கள் கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை

ADDED : செப் 17, 2024 04:07 AM
விழுப்புரம், : மானிய விலை உரங்களோடு, இணைப்பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர்(பொ) சீனுவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகளுக்கு மானிய விலை உரங்களோடு, இணைப் பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து உர ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில், நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்களான
யூரியா 7,427 டன், டி.ஏ.பி 2,228 டன், பொட்டாஷ் 993 டன், காம்ப்ளெக்ஸ் 8,402 டன், சூப்பர் 1640 டன் என மொத்தம் 20,690 டன் ரசாயன உரங்கள், அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனையகங்களில், போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் ஆதார் எண் பயன்படுத்தி, விற்பனை முனைய கருவி வாயிலாக உரம் வாங்குவது குறித்து உர ஆய்வாளர்களால் தொடர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், உரக்கட்டுப்பாட்டு ஆணையை மீறிய உரங்களுடன், கூடுதல் இடுபொருட்களை வாங்க வற்புறுத்தும் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவரது உர உரிமைத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.