/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
/
அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 03, 2025 07:23 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
காந்தியார் திடலில் மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் நடந்த விழாவில் 850 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. விழாவிற்கு, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் தீனதயாளன் வரவேற்றார். மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சண்முகம் பொது மக்களுக்கு கறவை மாடு, ஆடு, கிரைண்டர், லேப் டாப், தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார்.
மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி.
ஜெ.,பேரவை நிர்வாகிகள் வடபழனி, கார்த்திக், விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, பன்னீர், முன்னாள் இளைஞரணி செயலாளர் உதயகுமார், கவுன்சிலர்கள் ஜனார்த்தன், சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் திருப்பதியார்சங்கர், அய்யப்பன், சக்திவேல், பாலச்சந்திரன், பாசறை கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ் நன்றி கூறினார்.