/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் கணினி மூலம் ஒதுக்கீடு
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் கணினி மூலம் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 02, 2024 06:11 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம் , ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் நடந்தது. .
மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக 276 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த தொகுதிக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு கருவிகள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் நடந்தது.
முதற்கட்டமாக நடந்த கணினி மூலம் குலுக்கல் முறையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு 330 ஓட்டுப்பதிவு இயந்திரகளும் , 330 கட்டுப்பாட்டு கருவிகள், 357 ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் என மொத்தம் 1,017 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, வேட்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு கூடுதலாக 332 ஓட்டுப்பதிவு இயந்திரம் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தனி தாசில்தார் (தேர்தல்) கணேசன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.