/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளுக்கடை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
கள்ளுக்கடை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2024 11:17 PM

அவலுார்பேட்டை: கள்ளுக்கடை திறக்க கோரி அவலுார்பேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவலுார்பேட்டை கடைவீதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கவும், கள் இறக்க அனுமதி கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கரும்பு விவசாய அணி மாநில செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கி பேசினார்.
இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட அவைத்தலைவர் ஏழுமலைஉலகநாதன், மகளிரணி செயலாளர்கள் சாந்தி,ஜெயந்தி, பனையேறி பாதுகாப்பு இயக்க தலைவர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், பனையேறி விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

