ADDED : மே 02, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுா : சமையல் அறையில் தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வானுார் அடுத்த இடையஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன், 80; இவருக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சமையல் அறையில், தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

