/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது கார் மோதல் ஆந்திர வாலிபர் பலி
/
பைக் மீது கார் மோதல் ஆந்திர வாலிபர் பலி
ADDED : ஆக 22, 2024 02:06 AM
செஞ்சி : செஞ்சி அருகே பைக் மீது கார் மோதியதில் ஆந்திர மாநில வாலிபர் இறந்தார்.
ஆந்திர மாநிலம் அன்னமாயா மாவட்டம், டி. சுண்டு பள்ளி மண்டல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் நாயக் மகன் முடிசாய் யஷ்வந்த் நாயக், 24; இவர் பெங்களூரில் உள்ள சிமோக ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று அதிகாலை 12.30 மணிக்கு பெங்களூருவை சேர்ந்த தோழி உபேந்திரா மகள் ஷரித்தா,21;என்பவருடன் பைக்கில் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
செஞ்சி - திண்டிவனம் மெயின் ரோட்டில் நாட்டார்மங்கலம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. அதில், படுகாயமடைந்த முடிசாய் யஷ்வந்த் நாயக் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த ஷரித்தா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.