/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
/
விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2025 05:37 AM

கோட்டக்குப்பம்: வளர்ப்பு நாயை, அடித்துக் கொன்ற நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடகா மாநிலம், மங்களூரை சேர்ந்த நாட்டாஷா என்ற பெண், கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி திவான் கந்தப்பா நகரில் வசித்து வருகிறார். கடந்த வாரம், இவர் வளர்த்து வந்த நாயை, மர்ம ஆசாமிகள், கொடூரமாக அடித்து கொன்று, கயிற்றில் கட்டி தொங்கவிட்டனர்.
இதுகுறித்து நாட்டாஷா, கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்வத்தை கண்டித்தும், நாயை கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை கோரியும் நேற்று கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் முன் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.