/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா
ADDED : மார் 03, 2025 11:57 PM

மயிலம், ; மயிலம் பொறியியல் கல்லுாரியில் 26ம் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி மேலாண்மை இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி பேசினார். கல்லுாரி செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர்.
இயக்குனர் செந்தில் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராஜப்பன் ஆண்டறிக்கை வாசித்தார்.
இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதல்வர் பாலகிருஷ்ணன், சுப்ரமணியசாமி அறக்கட்டளை நிர்வாகிகள் கீதா, கவிதா, மருத்துவர்கள் நீலா பிரியதர்ஷினி, வைஷ்ணவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் மயிலம் பொறியியல் கல்லுாரியில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லுாரி துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.