/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் சார்பதிவாளர் மீது வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
/
வானுார் சார்பதிவாளர் மீது வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
வானுார் சார்பதிவாளர் மீது வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
வானுார் சார்பதிவாளர் மீது வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
ADDED : செப் 01, 2024 06:38 AM
விழுப்புரம், : வானுார் சார் பதிவாளர் உள்ளிட்ட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வானுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4:00 மணி முதல், இரவு 10:00 மணிவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 730 ரூபாய் சிக்கியது. இதுதொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக, சார் பதிவாளர் விழுப்புரத்தைச் சேர்ந்த சடகோபன், உதவியாளர்கள் சங்கீதா, கண்ணகி, டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் ராஜேஷ், கேமரா ஆபரேட்டர் குமரவேல், அலுவலக உதவியாளர் நடராஜன், ஆவண எழுத்தர் மாணிக்கம், இடைத்தரகர்கள் பீம்குமார், சேகரன் ஆகிய 9 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.