/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 28, 2024 11:14 PM
திண்டிவனம் : திண்டிவனத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திண்டிவனம் மகாத்மா காந்தி மது போதை மறுவாழ்வு மையம், சமுதாய கல்லுாரி இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காலை விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
திண்டிவனம் காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் துவக்கி வைத்தார். மகாத்மா காந்தி மது போதை மறுவாழ்வு மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் சமுதாய கல்லுாரி நிறுவனர் பாலமுருகன் மற்றும் கல்லுாரி மாணவகள் கலந்து கொண்டனர்.
நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணியில், போதை ஒழிப்பு குறித்த கோஷங்களை எழுப்பினர்.
கடைசியில் பேரணி காந்தி சிலை அருகே முடிவடைந்தது.

