/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பதட்டமான ஓட்டுசாவடிகளுக்கு நுண் பார்வையாளர் நியமனம்
/
பதட்டமான ஓட்டுசாவடிகளுக்கு நுண் பார்வையாளர் நியமனம்
பதட்டமான ஓட்டுசாவடிகளுக்கு நுண் பார்வையாளர் நியமனம்
பதட்டமான ஓட்டுசாவடிகளுக்கு நுண் பார்வையாளர் நியமனம்
ADDED : ஜூலை 02, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை யொட்டி, பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான ஓட்டுச்சாவடி மையங்களுக்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமை தாங்கினார். இடைத்தேர்தலில், பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான 44 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு 53 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் நடைபெற்றது.
தனி தாசில்தார் (தேர்தல்) கணேசன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.