/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை
/
மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை
ADDED : ஜூலை 18, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணத்தில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மரக்காணம் இருளர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி, 30; இவரது மனைவி பிரியா, 25; சில தினங்களாக கணவன் மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த பாரதி பூச்சி மருந்து குடித்து இறந்தார்.
புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.