/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலைஞர் கனவு இல்லம் திட்டம் தி.மு.க.,வினருக்கு முன்னுரிமை இல்லை சமூக வலைதளத்தில் புலம்பும் உடன்பிறப்புகள்

ADDED : ஆக 13, 2024 06:27 AM
தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 2024 - 2025ல் ஒரு வீட்டிற்கு தலா 3.5 லட்சம் ரூபாய் அளவிற்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அரசு 3,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, மயிலம், ஒலக்கூர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில், அரசாணை வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில், குறைவான அளவிற்கே ஆளுங்கட்சியான தி.மு.க.,விற்கு வழங்கப்பட்டுள்ளது என உடன் பிறப்புகள் சமூக வளைதளங்களில் குறிப்பிட்டு புலம்பி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க.,ஆட்சியில் பசுமை வீடுகள் பெரும்பாலனவை ஊராட்சிகளில் உள்ள அ.தி.மு.க.,கிளை செயலாளர்கள் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது.
ஆனால் தற்போதுள்ள தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் வீடுகள் ஆளுங்கட்சியான தி.மு.க.,வினருக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊராட்சி தலைவர் பரிந்துரையின் பேரில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தி.மு.க.,வை விட எதிர்கட்சியான அ.தி.மு.க.,வினர் அதிகம் பேர் பயன் பெறுகிறார்கள் எனவும் தி.மு.க., நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது பற்றி தி.மு.க.,வினரிடம் கேட்ட போது, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் தி.மு.க., நிர்வாகிகளின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை. கட்சிக்கு உழைத்த அடிமட்ட தி.மு.க., தொண்டர்களுக்கு வீடு வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏழை தி.மு.க.,வினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில், 'கலைஞரை தன் இதயத்தில் தாங்கியவனுக்கு வீடு இல்லை' என்று பதிவிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-நமது நிருபர்-