/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர் விடுதியில் சட்டசபை குழு ஆய்வு
/
மாணவர் விடுதியில் சட்டசபை குழு ஆய்வு
ADDED : மார் 06, 2025 03:25 AM

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மேல்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை, சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
திண்டிவனம் அடுத்த மேல்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிட நலக் கல்லுாரியில் பயிலும் 120 மாணவர்களுக்கான விடுதி, 584.93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணியினை, அமைச்சர் பொன்முடி மேற்பார்வையில், சட்டசபை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் நந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள் கிரி, துரை சந்திரசேகரன், சிந்தனைச்செல்வன் ஆகியோர், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினர்.
அப்போது, சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., ஒப்பந்ததாரரிடம், தாட்கோ மூலம் கட்டடம் கட்டுப்படும் இந்த பணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைக்காமல், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வைத்து ஏன் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தரணிவேந்தன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், அன்னியூர் சிவா, சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், சட்டசபை செயலர் சீனுவாசன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.