/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சட்டசபை பேரவை குழு வருகை கலெக்டர் ஆலோசனை
/
சட்டசபை பேரவை குழு வருகை கலெக்டர் ஆலோசனை
ADDED : பிப் 28, 2025 05:40 AM

விழுப்புரம்: தமிழ்நாடு சட்டசபை பேரவையின் பொது நிறுவனங்கள் குழு வருகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பின், அவர் பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டசபை பேரவையின் பொது நிறுவனங்கள் குழு வரும் 5ம் தேதி வருகை தருகிறது.
இக்குழுவினர் மாவட்டத்தில் தணிக்கை பத்திகள் மற்றும் தன்னாய்வு வினாப்பட்டியல் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
இதற்காக துறை அலுவலர்கள், தணிக்கை பத்திகள், தன்னாய்வு வினாப்பட்டியல் அறிக்கை தயார் செய்ய வேண்டும்.
இதில், பங்கேற்றுள்ள வருவாய், ஊரக வளர்ச்சி, மகளிர் திட்டம், வேளாண்மை, மின் உற்பத்தி கழகம் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தற்போது வரை நடந்து முடிந்த வளர்ச்சி திட்ட பணிகள் விபரம் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
குழு ஆய்வு பயணத்தின் போது, பாதுகாப்பு வசதி, வாகன வசதி, ஆய்வுப் பயண வழிபாதைகள் தயார் செய்ய வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.