/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தம்பதி மீது தாக்குதல்: 2 பேர் கைது
/
தம்பதி மீது தாக்குதல்: 2 பேர் கைது
ADDED : ஏப் 26, 2024 11:56 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தகராறை தடுத்த தம்பதியை திட்டி, தாக்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வையலாமூர் கிராமத்தைச் சேர்ந்த குருநாதன் மகன் செல்வம், 37; இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரரான வடிவேல்,40; என்பவருக்கும், நேற்று முன்தினம் முன்விரோத தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில், வடிவேலுக்கு ஆதரவாக பேசி, அதே பகுதியை சேர்ந்த நடராஜன்,75;  சென்று, சமாதானம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம், அவரது சகோதரர் ஆறுமுகம், அவரது மனைவி சத்யாதேவி ஆகியோர் சேர்ந்து, சமாதானம் பேச வந்த நடராஜன் மற்றும் அவரது மனைவி தீர்த்தம்மாள் ஆகியோரை திட்டி, தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த கணவன், மனைவி இருவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில், காணை போலீசார் செல்வம், ஆறுமுகம், சத்யாதேவி ஆகியோர் மீது வழக்கு பதிந்து, அதில், செல்வம், ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர்.

