ADDED : ஆக 29, 2024 07:57 AM
மயிலம்: மயிலம் அருகே ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மயிலம் அடுத்த முப்புளி ஊராட்சி தலைவர் சந்திரசேகர், 50. ஊரில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை ஊராட்சி தலைவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பார்வையிட்டார்.
அப்பொழுது முன் விரோத காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் சதீஷ், 23; முருகன் மகன் விமல், 20, ஆகியோர் ஊராட்சி தலைவரை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த சந்திரசேகர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், ஊராட்சி தலைவர் சந்திரசேகர், மயிலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டப்பு சார்பில், ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலம் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனிடையே சதீஷ் மற்றும் விமல் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.