/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
/
அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
ADDED : மே 12, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் அரசு பஸ் மோதியதில், ஆட்டோ டிரைவர் இறந்தார்.
திருவக்கரை அடுத்த கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகமதுல்லா, 45; ஆட்டோ டிரைவர். இவர், தன்னுடைய ஆட்டோவிற்கு எப்.சி., எடுப்பதற்காக திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் சென்னை சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் ஆட்டோவை விட்டுள்ளார்.
நேற்று இரவு 7:00 மணியளவில், ஆட்டோவை பார்ப்பதற்காக நடந்து சென்றவர் ஒர்க் ஷாப் எதிரே சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசு பஸ், ரகமதுல்லா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.