/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடைக்கால நோய்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு
/
கோடைக்கால நோய்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு
கோடைக்கால நோய்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு
கோடைக்கால நோய்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மே 02, 2024 06:36 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஜூனியர் ரெட்கிராஸ், மாவட்ட தன்னார்வ ரத்ததான இயக்கம் இணைந்து கோடைக்கால நோய்கள் சம்பந்தமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு கோடைகால விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நெடுமாறன், தனிப்பிரிவு சந்தோஷ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் எட்வர்ட் தங்கராஜ், எட்வின், திருலோகச்சந்தர், காந்தி, சரசு, மாலினிதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை, ரத்ததான இயக்கம் செயலாளர் கோபிநாத் ஒருங்கிணைத்தனர்.